Categories
உலக செய்திகள்

“ஹாயாக சென்ற கப்பல்”…. தீயில் கருகிய “சொகுசு கார்கள்”…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!

வால்க்ஸ்வேகன் குழுமத்தை சார்ந்த சரக்குக் கப்பல் ஒன்று 3,965 சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள தீவு அருகே செல்லும்போது அது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள அசோர்ஸ் தீவு அருகே வால்க்ஸ்வேகன் குழுமத்தை சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று 3,965 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு டெக்சாஸ் துறைமுகத்திற்கு சென்றுள்ளது. அப்போது அந்தக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போர்ச்சுகீஸ் விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்த 22 பேரை பத்திரமாக மீட்டுள்ளார்கள்.

இவ்வாறு இருக்க தீயில் சிக்கிய சொகுசு கார்களின் எண்ணிக்கையையும், விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |