Categories
சினிமா

ஹாய் காய்ஸ்…. நா பண்ணிட்டேன்…. உங்களால் முடியுமா….? ரசிகர்களுக்கு சவால்விடும் சன்னி லியோன்….!!

பிரபல நடிகை சன்னி லியோன் ரசிகர்களுக்கு சவால்விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல ஆபாச பட நடிகையான சன்னி லியோன் மதுபான் எனும் பாடலின் மூலம் சர்ச்சையில் சிக்கினார். இவர் இந்துக்கள் வணங்கும் கிருஷ்ணர் மற்றும் ராதையை அவமதிப்பதாக ஹிந்து அமைப்பினர் பலர் இவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சன்னி லியோன் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் பேசும் பொருளானது. அதில் அவர் தன்னுடைய மகனின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தனது வளர்ப்பு மகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இதுகுறித்து நெட்டிசன்கள் அவரை குறித்து தாறுமாறாக கமெண்ட் செய்திருந்தனர்.

தற்போது மீண்டும் சன்னி லியோன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, ஃபிலிப்பிங் பாட்டில் சேலஞ்சை மேற்கொண்டுள்ளார் சன்னி லியோன். அதில் இரண்டு முறை தவறிவிட்ட சன்னி லியோன் மூன்றாவது முறை சேலஞ்சை முடித்து தூள் கிளப்பியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள சன்னி லியோன் உங்களால் இதை செய்ய முடியுமா என்று கேட்டு ரசிகர்களுக்கும் சவால் விட்டுள்ளார்.

Categories

Tech |