சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் ஹாரன் அடித்துள்ளார். இதற்குச் சிறுமியின் முன்னாள் இருந்த நபர் வழிவிட மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதுடன் தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அந்த நபர் காது கேளாத மாற்றுதிறனாளி ஆவார். போலீசார் சிறுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories