ஹாலிவுட்டில் பிரபல நடிகை மேகன் போக்ஸ் மற்றும் நடிகர் பிரையன் ஆஸ்டின் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.
ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மேகன் போக்ஸ். இவருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் பிரையன் ஆஸ்டின் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி 10 வருட காலம் முடிவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து 2 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து கொள்வதாக முடிவு செய்து வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு 2 வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்ததன் அடிப்படையில் மேகன் போக்ஸ் மற்றும் பிரையன் ஆஸ்டின் தம்பதியினர் விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர்.