நடிகை வித்யா பிரதீப் வெள்ளை முடியுடன் ஹாலிவுட் நடிகையை போல இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வித்யா பிரதீப். இதை தொடர்ந்து இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது வித்யா பிரதீப்புக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனால் இவர் சீரியலை தவிர்த்துவிட்டு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் வித்யா பிரதீப் வெள்ளை முடியுடன் ஹாலிவுட் படத்தில் வரும் ஹீரோயின் போல இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘வித்யா பிரதீப்பா இது?’ என ஆச்சரியமடைந்துள்ளனர். இது தலைவி படத்தில் ஒரு சிறிய காட்சியில் வித்யா பிரதீப் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.