Categories
உலக செய்திகள்

ஹாலோவீன் திருவிழா… கூட்ட நெரிசல் சிக்கி 146 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவின் சீயோலின் இதோவான் பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாத்திற்காக திரண்டுள்ளனர். அங்கு மிகப் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் முதன்முறையாக முக கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவின் கூட்டம் இது என்ற காரணத்தினால் அதிக அளவிலான மக்கள் கூடியிருந்தனர். இதனை அடுத்து பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிய மக்களில் சுமார் 120 பேர் உயிரிழந்திருப்பதாக தென்கொரியா நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சூழலில் ஹாலோவின் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் 150கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் மாரடைப்புக்கு ஆளான சுமார் 150 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் காயம் பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் 400 பேர் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் 140 வாகனங்கள் மீட்பு பணிகள் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களில் மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவை பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும் ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்து இருப்பதையும் பார்க்க முடிகின்றது.

Categories

Tech |