தென் கொரியாவின் இடோவான் மாகாணத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய்திருவிழா வருடம் தோறும் அக்டோபர் மாத இறுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த வருடம் திருவிழா நடந்த நிலையில் பேய் வேடம் அணிந்த மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதனால் மூச்சு திணறி பல பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 தாண்டி உள்ளது.
19 வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர் இந்த சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த இரண்டு வருடங்களாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.