Categories
மாநில செய்திகள்

“ஹால்மார்க் எண் வேண்டாம்” தமிழகம் முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்…!!!

தங்க நகை கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி அடையாள எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தர நிர்ணய ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டரை மணி நேரம் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தி நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடைகள் முன்பு ஹால்மார்க் அடையாளம் வேண்டாமென்று வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னணி தங்க நகை கடைகள் நேற்று காலை 9 மணி முதல் 11 மணிவரை அடைக்கப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தில், தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை அவசியம்தான்.

ஆனால் நகையின் தரத்தை பார்க்காமல் இந்த நகை தயாரிக்கப்பட்ட விற்பனை குறித்த விவரங்கள் அறிய தனி அடையாள எண் கொண்டு வரப்படுவது என்பது தேவையில்லாதது. நகைகளை விற்று விட்டால் அதை அழிக்கவே முடியாது. இதனால் ஒரு நகையிலிருந்து மற்ற  நகைகளை செய்யமுடியாது. இதில் இப்படிப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே இந்தப் புதிய அறிவிப்பை எதிர்த்து கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |