அசோக் செல்வன் படத்தின் டிரைலரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிடுகிறார்.
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஹாஸ்டல் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.போபாசஷி என்பவர் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சதீஷ், கலக்கப்போவது யாரு யோகி, ரவிமரியா போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கல்லூரி மாணவர்களின் ஹாஸ்டலில் நடக்கும் நகைச்சுவை கலாட்டா இந்த படம் உருவாகியிருக்கிறது. டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர் ரவீந்திரன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஏப்ரல் 28 தேதி வெளியாக இருக்கிறது.
மேலும் சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியிருக்கிறது. நாளை மாலை 4 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகிறது. இதில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிடுகின்றார்.