Categories
தேசிய செய்திகள்

ஹா ஹா ஹா….. கையில் பதாகையுடன்…. ஊரே கேட்கும்படி சிரித்த பெண்கள்…. ஏன் தெரியுமா…???

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால், அரவிந்த் நகர் பகுதியில் சாலையானது பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் இரவு நேரங்களில் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது பலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதையடுத்து சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் அதிகாரிகள் சாலையைச் சீரமைக்கவில்லை.

இந்நிலையில், அரவிந்த் நகர் பகுதி மக்கள் சாலை சீரமைக்காத அரசு அதிகாரிகளைக் கண்டித்து, “சிரிப்பு போராட்டம்” நடத்தினர். போராட்டம் குறித்தான பதாகையைக் கையில் ஏந்தியபடி அவர்கள் சத்தமாக சிரித்துக் கொண்டே தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |