கர்நாடகாவில் சில கல்வி நிலையங்கள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததால் போராட்டங்களும் கலவரங்கள் வெடித்தன. இந்நிலையில் ஹிஜாப் அணிவது தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவி ரூபினா காணம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பேசிய ரூபினா காணம் கூறியதாவது, “யாரேனும் தைரியம் உள்ளவர்களாக இருந்தால் ஹிஜாபை தொட்டுப் பாருங்கள் அவர்களின் கைகள் வெட்டப்படும். ஹிஜாப் அணிவதும் முக்காடு போடுவதும் இந்திய கலாச்சாரம் இவை இரண்டையும் பிரித்து பார்க்காதீர்கள். ஒருவர் நெற்றியில் திலகம் இடுகிறார், ஒருவர் டர்பன் அணிகிறார் ,ஒருவருக்கு ஹிஜாப் அணிகிறார், இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை..?
முஸ்லிம் பெண்களின் மானத்தோடு விளையாடாதீர்கள்., இல்லையேல் அவர்கள் ஜான்சிராணிகளாக மாறி உங்களை பந்தாடி விடுவார்கள். ஹிஜாப் அணிவதை வைத்து அரசியல் செய்ய பார்க்காதீர்கள் உ.பியில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கர்நாடகா ஹிஜாப் பிரச்சனை உத்தரப் பிரதேசத்திலும் தொடர வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறுகின்றனர். உத்திரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள் மத்தியில் இது பற்றி நாங்கள் தெளிவாக எடுத்து கூறி வருகிறோம்.!” இவ்வாறு அவர் கூறினார்.