Categories
உலக செய்திகள்

ஹிஜாப்கள் இப்படி அணிய தடை…. பள்ளியின் இனவெறி கொள்கை…. மாணவர்கள் போராட்டம்…!!

லண்டனில் பள்ளி நிர்வாகம் முடி அலங்காரம் மற்றும் ஹிஜாப்கள் அணிவதற்கு தடை விதித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் Pimlico Academy பள்ளி நிர்வாகம் முடி அலங்காரம் செய்யவும், வண்ணமயமான ஹிஜாப்கள் அணிய கூடாது என்றும்  விதிமுறைகளை கொண்டு வந்தது . இந்த விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதையடுத்து மாணவர்கள் வகுப்பிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கருப்பு வரலாற்று மாதத்திற்கு எந்த அங்கீகாரமும் இல்லை என்றும் யூனியன் ஜாக் கொடியை  தடை செய்ததாகவும் பள்ளி நிர்வாகத்தின் மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மீது பெயர் தெரிவிக்காத நபர்  ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் பள்ளி நிர்வாகம் மதங்கள், இனக் குழுக்களை கொண்டுள்ளதாகவும் , பாரபட்சமான சீரான கொள்கை மற்றும் இனம் தொடர்பான சிக்கல்கள் நடந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய சீரான கொள்கையை பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தியது என்றும் அதில் மற்ற இனத்தவரின் கொள்கையை தடுக்கும் வகையில் வண்ணமயமாக ஹிஜாப்கள் , சிகை அலங்காரம் அனுமதிக்கப்படாது என்று தடைகளை விதித்தது என்று கூறினார்.மேலும் அவர் இந்த தடைகளை மீறினால் மாணவர்களின் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்திருந்ததது  என்றும் இது ஒரு இனவெறிக் கொள்கை எனவும் குற்றம் சாட்டினார்.

 

Categories

Tech |