Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஹிஜாப்பிற்கு விதிக்கப்பட்ட தடை” முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில்உள்ள  குளச்சல் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு அஷ்ரப் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் குளச்சல் எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் நிசார், நகர த.மு.மு.க தலைவர் ஷாகுல் ஹமீது, மாவட்ட ஒய்.எம்.ஜே செயலாளர் சேக் முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேப்போன்று தக்கலை அருகே இருக்கும் அழகிய மண்டபத்திலும் முஸ்லிம் அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்திற்கு அஞ்சுவண்ணம் மற்றும் திருவிதாங்கூர் ஜமாத் நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள். மேலும் இந்த போராட்டத்தில் சமூகநீதி மாணவர் மாநில துணைச் செயலாளர் செய்யது அலி, சுலீபிக்கர்‌ அலி, ஜமாத் மாவட்ட குழு பேச்சாளர் புஷ்ரா ஜமீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்‌. இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுப்பதற்காக தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Categories

Tech |