Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிந்து தான் நாங்கள் வருவோம் இல்லையெனில்…. சர்ச்சை குறித்து பேசிய கல்வியமைச்சர்….!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்திருக்கும் அரசு கல்லூரியில் இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏராளமான கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு வகுப்புக்குள் இருப்பதை இந்து மாணவ மாணவியர்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மங்களூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவ மாணவியர் சிலர் காவி உடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

இதையடுத்து கர்நாடகாவில் பல கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைக்குள் நுழையும் போது, ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு வகுப்பு தொடங்குவதற்கு முன்னர் அதனை கழட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கான சுடிதார் மற்றும் துப்பட்டா போன்ற ஆடை குறியீட்டை பின்பற்றுமாறு முதல்வர் மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் இதை எதிர்த்து 6 மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து ஏழாவதாக ஒரு மாணவி நேற்று அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தை தொடங்கினார். மேலும் இதுபற்றி கருத்து தெரிவித்த கர்நாடக கல்வியமைச்சர் பி.சி. நாகேஷ் கல்லூரியின் இந்த உத்தரவு மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனையாக இல்லை. அதனால் தயைகூர்ந்து கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள் என்று கூறியுள்ளார். இதே போன்று பல தரப்பினரும் தங்களுடைய கருத்தை கூறி வருகின்றனர்.

Categories

Tech |