ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிகளில் பள்ளி-கல்லூரிகளில் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் அக்கல்லூரி முதல்வர் அவர்களை வளாகத்தின் வெளியே தடுத்து நிறுத்திவிட்டார். இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிந்து மாணவ மாணவிகள் காவி துண்டு போட்டுக் கொண்டு வகுப்பறைக்கு வந்தனர். இது சம்பந்தமாக கடந்த 8-ஆம் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. 3 நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் இன்று ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்கு நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் மாணவிகள் ஹிஜாப் நீக்கிய பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து மாண்டியாவில் ரோட்டரி சோசைட்டி பள்ளியில் புர்கா அணிந்து வந்த ஆசிரியர்களும் புர்காவை நீக்கிய பிறகே பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சில இடங்களில் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஷிவ்மோகாவில் உள்ள ஒரு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஹிஜாபை அகற்றினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கூறிவிட்டனர். இதனால் தேர்வு எழுதாமல் அந்த மாணவி வீட்டிற்கே திரும்பி சென்றுவிட்டார்.