Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணியலாம்…. ஆனா ஒரு கண்டிஷன்…. அமைச்சரின் சர்ச்சை பேச்சு…!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் காவி துண்டு போன்றவற்றை அணிந்து வந்துள்ளனர். இதன் காரணமாக ஹிஜாப் அணிந்து வந்த மாணவ மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது. இதனால் இஸ்லாமிய மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மத நல்லிணக்கத்தையும் சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய மாநில பாஜக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறுகையில், “இராணுவத்தில் பின்பற்றப்படுவது போன்ற சட்ட திட்டங்கள் பள்ளிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். அதோடு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம் ஆனால் பள்ளிக்குள் நுழைந்த உடன் அதனை கழட்டி வைத்துவிட்டு வரவேண்டும் என கூறியுள்ளார். பள்ளிகளில் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே சீருடை தான் இந்த விஷயத்தில் மாணவர்கள் அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக செயல்பட வேண்டாம்.” என அவர் கூறியுள்ளார். கல்வி அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

Categories

Tech |