Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு…. கல்லூரி முன் கோஷமிட்ட மாணவிகள்…. பெரும் பரபரப்பு….!!!

மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து கல்லூரிக்குள் வர அனுமதி மறுத்து கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு இறுதி உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை யாரும் அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவிட்டது. இருப்பினும் அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

இதனால் அக்கல்லூரி முதல்வர் அவர்களை வளாகத்தின் வெளியே தடுத்து நிறுத்திவிட்டார். இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து மாணவ மாணவிகள் காவி துண்டு போட்டுக் கொண்டு வகுப்பறைக்கு வந்தனர். இது சம்பந்தமாக கடந்த 8-ஆம் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. 3 நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் இன்று ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்கு நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அப்போது, அந்த மாணவிகளிடம் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து கல்லூரிக்குள் வர அனுமதியில்லை என்று கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதனால் அந்த மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கல்லூரி முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Categories

Tech |