Categories
அரசியல்

“ஹிஜாப் அணிய இஸ்லாமிய பெண்களுக்கு விருப்பமில்லை…!!” யோகி பரபரப்பு பேச்சு…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவ, மாணவிகள் சிலர் காவி உடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முதல் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தை சென்றடைந்தது. அங்கே பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் எந்தவித மத அடையாளங்களையும் பிரதிபலிக்கும் உடைகளை அணிந்து வர கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, இஸ்லாமிய பெண்கள் விருப்பப்பட்டு ஹிஜாபை அணிவதில்லை எனவும் முத்தலாக் முறையை இஸ்லாமிய பெண்கள் விருப்பப்பட்டா ஏற்றுக்கொண்டனர் உங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களிடம் கேட்டுப்பாருங்கள் எனவும் கூறினார். அவர்களுக்கு இது பற்றி பேசினால் கண்ணீர் தான் வரும். நான் இஸ்லாமிய பெண்களின் மனதை புரிந்து வைத்துள்ளேன். முத்தலாக் முறையை ஒழிப்பத்தற்காக ஜனூபூரை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார். உடை என்பது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம் இதில் மதம் தொடர்பான கருத்து திணிக்கப்படுதல் என்பது தவறானது என அவர் கூறினார்.

Categories

Tech |