Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிய தடை….. இஸ்லாமிய பெண்களுக்கு நெருக்கடி….கர்நாடாவில்என்ன நடக்கிறது..??

கர்நாடகாவில் ஹிஜாப்  அணிவதற்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்  கல்லூரி  வளாகத்தில் அமர்ந்து  மாணவிகள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்கள் முகத்தில் அணிந்து கொள்ளும் ஒரு வகை துணியாகும். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள  சில  கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்  குந்தபூரில்  உள்ள  அரசு கல்லூரியில் மீண்டும் ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதற்காக சுமார் 40 மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து இன்று போராட்டம் செய்துள்ளனர். இன்றோடு இரண்டாவது நாளாக ஹிஜாப் அணிந்ததற்காக மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிற நிலையில் 18 வயது முதல் 20 வயது உள்ள அனைவரும் ஹிஜாப் அணிய அனுமதி இருந்தாலும் கல்லூரி வளாகம் தடை விதிப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர் .

இதுபற்றி தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். அப்போது கல்லூரி வளாகங்களில் ஹிஜாபை அணியலாம்  எனவும் , துப்பட்டாவின்  நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கல்லூரியின் முதல்வர் நாராயணன் செட்டி கூறியதாவது; தான் ஒரு அரசு ஊழியர் என்றும், அரசின் விதிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும், என்றும் காவி துண்டு அணிந்து கொண்டு சில மாணவர்கள் காத்திருப்பதாகவும், மதத்தின் பெயரில் அமைதியை  சீர்குலைப்பதற்கு   முதல்வர்தான் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |