Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிவதற்கான தடை தொடரும்!…. கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் தகவல்….!!!!

கர்நாடகா மாநிலத்தில் வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் உடை அணிவதற்கு தடைவிதித்து சென்ற மார்ச்மாதம் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவிகள் சிலர் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களின் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்கள் 10 நாட்கள் நடைபெற்ற நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த மாதம் 22ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா போன்றோர் அடங்கிய அமர்வு முன் இன்று வெளியிட்டது. அவற்றில் ஹிஜாப் தடை செல்லும் எனவும் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடகா ஐகோர்ட்டின் தடை செல்லாது எனவும் இரு வேறு தீர்ப்புகளை நீதிபதிகள் அறிவித்தனர்.

இதன் காரணமாக இவ்வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அம்மாநில கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது “சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறோம். உலகெங்கிலும் இருக்கும் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டாமென கூறிவருவதால், சிறந்த தீர்ப்பை நாங்கள் எதிர்பார்த்து வந்தோம். இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு இடைக் காலத்திலும் பொருந்தும். எனவே மாநிலத்தின் கல்விநிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீடிக்கிறது. பெண்களின் விடுதலை குறித்து பேசும்காலம் இது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடைவிதித்த உத்தரவு தொடரும். பள்ளி-கல்லூரி உள்ளிட்ட எந்த கல்வி நிலையங்களிலும் எந்த ஒரு மத அடையாள சின்னங்களுக்கு அனுமதியில்லை” என அவர் கூறியுள்ளார்

Categories

Tech |