Categories
உலக செய்திகள்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்… 277 பேர் பலி… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை எதிர்த்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிஜாபை கழற்றி வீசியும் ஹிஜாபை தீவைத்து எரித்தும் பெண்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சூழலில் ஈரானில் மனித உரிமை மீறல் பற்றி ஐநா குழுவை சேர்ந்த ஜாவத் ரஹ்மான் பேசியபோது, கடந்த ஆறு வாரங்களாக ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் சட்ட மாணவர்கள் என இதுவரை 14,000 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என கூறியுள்ளார்.

Categories

Tech |