Categories
உலக செய்திகள்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்… பெண்களின் கண்கள், மார்பு, பிறப்புறுப்பை குறி வைத்து துப்பாக்கி சூடு… வெளியான பகீர் தகவல்…!!!!!

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதாவது போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை குறி வைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு சம்பவங்களை நடத்தியுள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் முகம், கண்கள், பிறப்புறுப்பு, மார்பு பகுதியை குறிவைத்து பால்ரஸ் குண்டுகள் கொண்ட துப்பாக்கி மூலம்  ஈரான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பெண்களைப் போன்று ஆண்கள் மீது குறிப்பிட்ட பகுதிகளை குறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது போராட்டத்தில் ஈடுபடும் ஆண்களின் குட்டம், முதுகு, பகுதியில் துப்பாக்கி சூடு  நடத்துவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில் ஈரான் அரசு முதன் முறையாக போராட்டக்காரர்களுக்கு பணிந்துள்ளது. அதாவது ஈரானில் பொதுவெளியில் இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிப்படுத்தவும் உறுதிப்படுத்தும் அறநெறி போலீஸ் பிரிவை ஈரான் அரசு கலைத்துள்ளது. மேலும் அறநெறி போலீஸ் பிரிவு நிரந்தரமாக கலைக்கப்பட்டதா? அல்லது இது தற்காலிகமான நடவடிக்கையா? என்பது அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் பெண்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

Categories

Tech |