மேற்கு வங்காளம் ஹவுரா நகரில் துலாகார் பகுதியில் மாணவ-மாணவிகள் படிக்ககூடிய உயர்நிலை பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் சென்ற திங்கட்கிழமை மாணவர்கள் சில பேர் நாமபாலி எனப்படும் காவி உடையான மேல் துண்டை அணிந்து சென்று இருக்கின்றனர். இதற்கு ஹிஜாப் அணிந்து இருந்த மாணவிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது பள்ளி சீருடை அல்ல என ஒருவர் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவர்கள், மாணவியை நோக்கி பிறகு நீ ஏன் ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறாய்..? என்று கேட்டுள்ளனர். இத்தகராறில் ஒரு மத பிரிவினர், பள்ளியை சூறையாடி சொத்துகளை சேதப்படுத்தி இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.
மேலும் அவர்களை வெளியில் தள்ளியுள்ளனர். இதன் காரணமாக நிலைமை மோசமடைந்த நிலையில், காவல்துறையினர் மற்றும் அதிவிரைவு படை சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். அதன்பின் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக பள்ளி நிர்வாக குழு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது இனிமேல் மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே வர வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது.