முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம் அமைப்பினர் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செய்யதலி தலைமை தாங்கினார்.
இவர்கள் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பெண் விடுதலை கட்சியின் பெண் நிறுவன தலைவர் சபரிமாலா சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த போராட்டத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டு கர்நாடக நீதிமன்றத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.