ஹிஜாப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம்பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்கியது. இதில் 475 பேர் உயிரிழந்தனர். மேலும் 18000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தின் போது மோசென் ஷெகாரி என்பவர் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மரண தண்டனை விதித்து ஈரான் புரட்சிகர கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவரை தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இந்நிலையில் போராட்டங்களில் கைதாகி மரண தண்டனை விதித்து அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். மேலும் இந்த சம்பவத்திற்கு ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் மக்மூத் அமிரி பொத்தாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.