Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் போராட்டம்: மாணவிகளின் செல்போன் எண்கள் வெளியீடு…. அதிர்ச்சியில் பெற்றோர்கள்…!!!!

ஹிஜாப் போராட்டத்தை தொடர்ந்து மாணவிகளின் மொபைல் எண்களை சிலர் வெளியிடுவதாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யு.  கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் 6 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து ஏ.பி.வி.பி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டனர்.

மேலும் இதை தொடர்ந்து பாபாசாகிப் அம்பேத்கர் மாணவ அமைப்பினர் நீலதுண்டு  அணிந்துகொண்டு “ஜெய்  பீம்”  என முழக்கமிட்டது  பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த வழக்கிற்கு  உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் மதரீதியான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவும் மாணவர்கள் சீருடைகளை  மட்டுமே அணிந்து வரவேண்டும்.

அவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. மேலும் இது தொடர்பான வழக்கு திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மாணவிகளின் பெற்றோர் உடுப்பி  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதனை சந்தித்து” எங்கள் பிள்ளைகளின் மொபைல் எண்ணை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் வெளியிட்டு உள்ளனர்” எனவே இதனை சிலர் தவறாக பயன்படுத்தலாம்.

அதனால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ள காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளது.

Categories

Tech |