கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடை தொடர்பான பிரச்சினையை குறித்து இந்திய சுகாதார அரசுக்கு பாகிஸ்தான் சம்மன் விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்பறையில் அனுமதிக்க மறுக்கபட்டனர். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப்அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த மாணவிகள் கல்வி நிர்வாகத்தின் மீது கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை அடுத்து ஹிஜாப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தினால் கல்லூரியில் பதற்றம் நிலவியது. இதனைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி, கர்நாடகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய மாணவர்கள் தாக்கல் செய்த மனுவிற்கு இடைக்கால தடை போட முடியாது என நீதிபதி தெரிவித்த பின்னர் கர்நாடகா ஐகோர்ட்டில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டார். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய சுகாதார அரசுக்கு சம்மன் விடுத்துள்ளது. அதில், கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளதற்கு வருத்தம் தெரிவித்து மற்றும் கண்டித்துள்ளது.