ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹாங்கிங் செய்த போராட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் இஸ்லாமிய முதல் சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சூழலில் தெஹ்ரான் நகரில் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்புக்கு போராட்டத்தில் ஆதரவாக கலந்து உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் சனந்தஜ் மற்றும் சாக்கிஜ் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்த ராணுவ படைகள் களம் இறங்கி உள்ளது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த ஓட்டுனர் ஒருவரும், வயிற்றில் துப்பாக்கிக் கொண்டு பாய்ந்ததில் மற்றொருவர் என இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். சாக்கிஜ் நகரில் பள்ளியில் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு ஆசிரியர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனை ஹெங்காவ் என்ற ஈரான் நாட்டு மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.
இந்த நிலையில் இதுவரை நாடு முழுவதும் 1574 பேர் பலியான நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்ற அளவிலேயே ஈரான் அரசு தொடர்புடைய ஊடக தகவல் குறிப்பிட்டு வருகிறது. இந்த சூழலில் ஈரானிய இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் சார்பிலான தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பின் போது உள்ளே புகுந்த புரட்சிக்காரர்கள் சில நிமிடங்கள் வரை நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். அதில் சில வினாடிகள் வரை போராட்டக்காரர்களின் செய்கையால் ஹாங்கிங் செய்யப்பட்டு பெரிய மீசை தாடி மற்றும் புருவங்களுடன் கூடிய கருப்பு வண்ண முகமூடி அணிந்த கார்ட்டூன் வரைபட தோற்றம் காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த ஹேக்கிங்கிற்க்கு அவர்கள் பொறுப்பேற்று இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து காமினியின் படமும் ஈரானில் கடந்த மாதம் உயிரிழந்த இளம் பெண்களான நிகார் ஷாகராமி, இந்த ஹதீஸ் நஜாபி,மஹ்சா ஆமினி மற்றும் சரீனா இஸ்மாயில் ஜடே போன்றோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் சில வினாடிகள் வரை திரையில் காட்டப்பட்டுள்ளது மேலும் எங்களுடன் இணைந்து போராட வாருங்கள் என்ற செய்தியும் அந்த புகைப்படத்துடன் காட்டப்பட்டது எங்களுடைய இளைஞர்களின் ரத்தம் உங்கள் பிடியிலிருந்து வழிந்தோடுகிறது என கூறப்பட்டிருந்தது.