ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானில் இளம் பெண் மஹ்சா அமினியை போலீஸர் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஈரானில் பெண்கள் தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது களம் இறங்கியுள்ளார். முன்னதாக ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் போன்ற முன்னணி பிரெண்ட்ஸ் நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பிரியங்கா சோப்ராவும் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது ஹிஜாப் முறையாக அணையாததற்காக மஹ்சா இளம் வயதிலேயே அவரது வாழ்க்கை ஈரானிய காவல் துறையினரால் மிகவும் கொடூரமாக பறிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஈரானிலும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் பகிரங்கமாக எழுந்து நின்று குரல் கொடுத்து வருகின்றார்கள். மேலும் பல வடிவங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். மேலும் நீண்ட காலமாக கட்டாயம் மௌனத்திற்கு பின் வெளிவரும் எதிர்ப்பு குரல்கள் எரிமலையாக வெடித்து சிதறும் இவை தடுக்கப்படக் கூடாது என பதிவிட்டுள்ளார்.