ஹிஜாப் விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் அனைவரும் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே அந்த நாட்டின் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாபை கழற்றி எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த போராட்டம் நாளுக்கு நாள் பல நகரங்களுக்கு பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஈரானில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது ஆனால் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஈரான் அரசிற்கு எதிராகவும் ஹிஜாப் கட்டுப்பாட்டிற்கு எதிராகவும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தயும் தடியடி கண்ணீர் புகை கொண்டு வீசியும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் இதனால் பலர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் 19 பேர் குழந்தைகள் என ஈரான் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து போராட்டம் தீவிரமடைந்து வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.