Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்… தீவிரமடையும் போராட்டம்… பள்ளி மாணவிகள் கைது…? பெரும் அதிர்ச்சி…!!!!!!

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் பள்ளி மாணவர்களை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் இஸ்லாமிய மத சட்டத்தின்படி பெண்கள், பெண் குழந்தைகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இந்த சூழலில் தெஹ்ரான் நகரில் பெண்கள் ஹிஜாப் அணியவில்லை என போலீசார் நடத்திய தாக்குதலில் 22 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் பின் அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்கள் இடையே நடைபெற்ற தாக்குதலில் 180 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இதில் 19 பேர் குழந்தைகள் என ஈரான் மனித உரிமை குழு கூறியுள்ளது இந்த போராட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளை போலீஸர் கைது செய்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அங்கு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது ஈரானின் மேற்கு பகுதியில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போலீசார் போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.

Categories

Tech |