Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: நீதிமன்றம் அளித்த அட்வைஸ்…. மீண்டும் அமைதிநிலை அடையும் கர்நாடகா..!!!

ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மதம் சார்ந்த ஆடைகளை அணியக் கூடாது என நீதிமன்றம் மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவி துணி அணிந்து இந்து மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வெறுப்பு உணர்வு ஏற்பட்டு பெரும் பதற்றமான சூழல் உருவானது.

இந்த விவகாரத்தால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில், இதை குறித்து வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில்  இன்று நடைபெற்ற இந்த வழக்கு தலைமை நீதிபதி  ரித்து ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா திக்சித், ஜே.எம்.காஸி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மதம் சார்ந்த ஆடைகளை நிறுவனங்களில் அணியவேண்டாம் என்று நீதிபதியின் சார்பில் கேட்டுக் கொண்டது. மேலும் வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனைஅடுத்து கர்நாடக உயர் நீதிமன்றம் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கும்  அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |