Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: போராடிய பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல்…. 6 பேர் கைது…!!!

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பிற்கு வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு மாணவியர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்துள்ளது அனைத்து பள்ளிகளிலும் 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய ஒரு பெண்ணின் சகோதரர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அந்த பெண்ணின் தந்தை ஊடகத்தில் ஹிஜாப் அணிவது பற்றி பேசியதால் அவரை தாக்க  அவர் உணவகத்திற்கு வந்த 30, 40 பேர் அவர் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணின் சகோதரன் தாக்கியுள்ளனர் இதுபற்றி முதற்கட்டமாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உடுப்பி காவல்துறை கூறியுள்ளது.

Categories

Tech |