Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்… 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து உடுப்பியில்   பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பில் வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் அனைவரும் ஹிஜாப்  தங்கள் உரிமை, அது   அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது எனக் கோரி போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கான விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் 144 தடை உத்தரவை மாவட்ட துணை ஆணையர் பிறப்பித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி பிப்ரவரி  14ஆம் தேதி காலை 6 மணி முதல் 19-ஆம் தேதி வரை மாலை 6 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து  பள்ளிகளை  சுற்றி 200 மீட்டர் தூரம்  வரை 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என டி.சி குர்மா  ராவிடம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோரிக்கை வைத்ததை  தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியை சுற்றி 5 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கூடுவதற்கு  அனுமதி இல்லை. மதத்தை சீர்குலைக்கும் எந்த ஒரு செயலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் குச்சிகள், கத்திகள், அல்லது கொடிய  ஆயுதங்களைக் கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |