இந்தியா-இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் மேட்சில் இந்தியா 329 ரன்களில் ஆல் அவுட் ஆகி ஆட்டம் இழந்துள்ளது .
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அபாரமாக ஆடினார். அதற்குப்பின் பேட் செய்த விராட் கோலி, சுப்மான் கில் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளனர் .முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ரோஹித் சர்மா 161 ரன்கள் ,ரஹானே 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதில் 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் இந்திய அணி குவித்துள்ளது. 2 வது நாளாக இந்திய அணி ஆட்டத்தை தொடங்கிய முதல் ஓவரில் அக்சர் பட்டேல் 5 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து நிதானமாக ஆடினார் . மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி 95.5 ஓவர்களில் ஆட்டமிழந்து 329 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் மட்டும் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.