ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான தனுஷின் அசுரன் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அசுரன். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, வெங்கடேஷ், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலையும் வாரிக் குவித்தது . மேலும் அசுரன் படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் அசுரன் படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த மார்ச் மாதம் அசுரன் படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹிந்தி அசுரன் படத்தை யூடியூபில் இரண்டே மாதத்தில் மூன்று கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை அடுத்து தனுஷின் கர்ணன் படமும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.