Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

திரிஷ்யம் 2 படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாளத் திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது . தற்போது திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் திரிஷ்யம் 2 படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை பனோரமா ஸ்டுடியோ இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கில் நடித்த அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு ஆகியோர் திரிஷ்யம் 2 ஹிந்தி ரீமேக்கில் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Categories

Tech |