Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் மாஸ்டர்… ‘ஜேடி’யாக நடிக்கப்போவது யார் தெரியுமா?…!!!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது .

Salman Khan approached for south hit - 'Master' Remake; source says he “has  liked the concept ...

இந்த படம் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

Categories

Tech |