அருண் விஜய்யின் தடம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான தடம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. மகிழ் திருமேனி இயக்கியிருந்த இந்த படத்தில் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் ராம் போதினேனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘ரெட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தடம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . அறிமுக இயக்குனர் வர்தன் கேட்கர் இயக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் . விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகிற செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது.