சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான திருட்டுப்பயலே-2 படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசி கணேசன். இவர் பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதைத் தொடர்ந்து சுசி கணேசன் இயக்கத்தில் விரும்புகிறேன், திருட்டுப்பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தது. மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான திருட்டுப்பயலே 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் திருட்டுப்பயலே 2 திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘தில் ஹே கிரே’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சுசி கணேசனே இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் வினித் குமார் சிங், அக்ஷய் ஓப்ராய், ஊர்வசி ரவ்துலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகை சீதா ஹிந்தியில் அறிமுகமாக இருக்கிறார். தற்போது இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.