Categories
சினிமா

ஹிந்தி சினிமாவில்…. 30 வருஷம்…. நடிகை மலைக்கா அரோரா பேட்டி….!!!!

ஹிந்தி சினிமாவில் கடந்த 30 வருடங்களாக நடிகையான மலைக்கா அரோரா எல்லா தடைகளையும் கடந்து வந்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நமது நாட்டில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வழியில் பயணிப்பது என்பது மிககடினம் வாய்ந்தது ஆகும். இந்தியாவிலுள்ள பெண்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்கின்றனர். திருமணம், குழந்தைகள் இவை அனைத்தும் ஒரு செயலை தடைசெய்யும் வகையில் இருக்கிறது.

ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டால், அவருக்கு குழந்தைகள் வந்துவிட்டால், அவர் எல்லாவற்றையும் நிறைவுசெய்து விட்டார் என நாம் எண்ணுகிறோம். நான் இதில் இருந்து வேறுபடுகிறேன். அதுபோன்ற எண்ணங்களை என்னால் மாற்றமுடிந்துள்ளது என நான் நினைக்கிறேன். இதன் காரணமாக 3 தசாப்தங்கள் கடந்தும் நான் இன்னும் திரையுலகில் நீடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |