Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்தி திணிப்பு…? தமிழக வேட்பாளர் பட்டியல் ஹிந்தியில்…. எழுந்த கடும் எதிர்ப்பு..!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. அதிமுகவில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது. பாஜக வேட்பாளர் பட்டியலை பாஜக டெல்லி மேலிடம்  வெளியிட்டது. அதில் வேட்பாளர்களின் பெயர்கள், அவர்கள் போட்டியிடும் சட்டமன்ற தொகுதி ஆகியவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்கள், தொகுதிகளை பாஜக ஹிந்தியில் வெளியிட்டுள்ளது. இதிலும் ஹிந்தி திணிப்பா? என்ற ரீதியில் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஒரே நாடு ஒரே, மொழி என்ற ரீதியில் தமிழகத்தில் ஹிந்தியை திணிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்ற நிலையில் இதுவும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Categories

Tech |