தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து மனிதன், சைக்கோ, கண்ணேகலைமானே போன்ற உதயநிதியின் தரமான படங்களின் வரிசையில் தற்போது நெஞ்சுக்கு நீதி படமும் இணைந்துள்ளது. மேலும் நடிகர், சட்டமன்ற உறுப்பினர் என பிசியான உதயநிதி தற்போது பல படங்களில் விநியோகஸ்தர் உரிமையை வாங்கி வெளியிட்டு வருகிறார். அதன்படி ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட், கமலஹாசனின் விக்ரம் போன்ற படங்களை வாங்கி வெளியிட்டார்.
தற்போது உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அமீர்கான் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘லால்சிங் சத்தா’ என்ற படத்தையும் தமிழ் வாங்கி வெளியிடுகிறார். ஹிந்திக்கு எதிராக குரல் கொடுத்து வரும் உதயநிதி ஹிந்தி படத்தின் உரிமையை வாங்கியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் அளித்த உதயநிதி, நான் என் டீமிடம் ஹிந்தி படத்தையாவது விட்டு வைக்கலாம் என சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அது போக ஒரு நாள் அமீர்கான் வீடியோ காலில் என்னிடம் பேசினார். அதன் பிறகு அவரின் படத்தை நான் வாங்கினேன். மேலும் நான் அமீர்கானின் தீவிர ரசிகன் என்று கூறினார். உதயநிதி வெளியீடு லால் ‘சிங் சத்தா’ படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.