Categories
மாநில செய்திகள்

“ஹிந்தி மட்டுமில்லாமல் 22 மொழிகளிலும் தேர்வு நடத்துங்கள்”….. கனிமொழி அதிரடி டுவிட் பதிவு…..!!!!

ஒன்றிய சமூக நீதி அமைச்சர் சார்பில் மேல்நிலைப் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில் மேல்நிலைப் படிப்புக்கு பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பிறப்பிடமான இந்தியாவில் இந்தியை மறைமுகமாக தீணிக்கும் ஒன்றிய அரசு இந்த பாரபட்சமான முறையை விடுத்து அரசமைப்பு சட்டத்தின் 8 வது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளிலும் தேர்வு நடத்தி சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |