ஹாலிவுட் படமான ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் சேதுபதி இழந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் தனக்கு வந்த ஹிந்தி ரீமேக் பட வாய்ப்பை விஜய் சேதுபதி இழந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஹாலிவுட்டில் பிரபலமான ‘ பாரஸ்ட் காம்ப் ‘ படத்தின் ஹிந்தி ரீமேக் ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் தயாராகவுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் அமீர்கான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் அமீர்கானுக்கு நண்பனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதில் இவருக்கு எப்போதும் தொனதொனவென பேசிக்கொண்டிருக்கும் கதாபாத்திரமாம் . அதை அமீர்கான் விஜய் சேதுபதிக்காக ஒரு தமிழர் கதாபாத்திரமாக மாற்றி அமைக்கவும் முடிவு செய்திருந்தாராம். ஆனால் தற்போது விஜய்சேதுபதிக்கு பதில் வேறு ஒரு நடிகரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் கதாபாத்திரத்திற்காக விஜய் சேதுபதி தன் உடல் எடையை குறைக்க தவறியதால் இந்த வாய்ப்பை இழந்து விட்டாராம் . இதனால் அவருக்கு பதில் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு இந்தி நடிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .