Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்துக்களுக்கு ஆபத்து…! ”கொஞ்ச நாளில்” அப்படி ஆகிரும் – அர்ஜுன் சம்பத் பரபரப்பு …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு போட்டியிட விரும்புகின்ற வேட்பாளர்களிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. ஒரு நாளைக்கு 3 மாவட்டம் வீதம் நடைபெறுகின்றது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,திருவண்ணாமலை பகுதியில் இருக்கக்கூடிய இந்து மக்கள் கட்சிகளுடைய நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மேல்மருவத்தூர் மேல்மலையனூர் அங்காள அம்மன் திருக்கோயிலில் நடைபெற இருக்கிறது.

இதுவரை 180 தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் தரப்பட்டு இருக்கிறது. சுமார் 262 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து இருக்கிறார்கள். 1000 ரூபாய் கட்டணம் கட்டி… இந்துகளுக்காக வாதாட… போராட…. பரிந்து பேச, குரல் கொடுக்க ஹிந்து சமய மக்களின் குரல் நம்முடைய தமிழக சட்டமன்றத்தில் எதிரொலிக்க…. அந்த பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்து மக்கள் கட்சி 234 தொகுதியிலும் ஆன்மீக அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி தேர்தல் பணிகளை செய்து வருகிறோம்.

அதிமுக – பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்று ,அதன் மூலமாக இந்த தேர்தலை சந்திக்கவும் நாங்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்து இருக்கிறோம். இதற்கு மத்தியில் நாங்கள் போகின்ற இடம் எல்லாம் இந்துக்கள் 100% வாக்களிப்பது இல்லை. இஸ்லாமியர்கள் 100% வாக்களிக்கிறார்கள். அவர்களுக்கான ஓட்டு வங்கி இருக்கிறது .கிறிஸ்தவர்கள் 100% அவர்கள் மத குருமார்கள் சொல்வதை கேட்டு வாக்களிக்கிறார்கள். அவர்களுக்கான ஓட்டு வங்கி இருக்கிறது. இந்துக்களுக்கான  ஓட்டு வங்கி கிடையாது. இந்துக்கள் கட்சி வாரியாக சாதிவாரியாக பிரிந்து இருக்கிறார்கள்.

எனவே தான் இந்த தமிழகத்தில் இன்னும் கொஞ்ச நாளில் இந்து  – தமிழர்கள் சிறுபான்மை ஆவர்கள் போலிருக்கிறது. ஏற்கனவே மதமாற்ற நடவடிக்கைகளின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மை ஆகிவிட்டார்கள். இத்தகைய சூழலில் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கி வருகிறது .எனவே தமிழகத்தில் பெரும்பான்மை இந்து மக்களுடைய குரலையும், அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் கேட்கவேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Categories

Tech |