Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்துக்களுக்கு ஒரு நியாயமா ? இதெல்லாம் கண்ணு தெரியாதா ? – பாஜக சரமாரி கேள்வி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி நாராயண திருப்பதி, சென்ற மாதம் 29ஆம் தேதி என்று நினைக்கிறேன், கோயம்புத்தூர்ல ஒரு இஸ்லாமியரை அனீஸ் என்று பெயர். அவர் ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்கிறார்கள், அவர் குரான் குறித்தும், முகமது நபி குறித்தும் தவறாக பதிவிட்டார் என்பதால் கைது செய்து இருக்கிறார்கள், அதை நான் வரவேற்கிறேன். தவறாக ஒரு மதத்தை அவதூறாக பேசுவது தவறு. அதற்காக கைது செய்ய செய்திருக்கிறார்.

எப்படி இஸ்லாமியத்தை அவமதித்ததற்காக கைது செய்து விட்டோம் என்று அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி கூறியிருக்கிறார், கைது செய்து இருக்கிறார். நான் என்ன கேட்கிறேன் தினம்தோறும் யூடியூபிலும், பேஸ்புக்கிலும், டிவிட்டர்லயும் இந்து கடவுள்களை குறித்து ஆபாசமாக, தரக்குறைவாக, கேவலமாக பதிவு செய்தது குறித்து பல புகார்களை நாங்கள் அளித்திருக்கிறோம், நானே பலமுறை புகார் அளித்திருக்கிறேன்.

ஏன் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாதா? ஏன் தமிழக அரசுக்கு அதெல்லாம் கண்ணு தெரியாதா? அதனால இந்த இரட்டை நிலைப்பாடு இதுதான் மதவாதம், இந்துக்களை எப்படி வேண்டுமானால்….  இந்து கடவுள்களை கேவலமாக பேசலாம்.  அதே மாதிரிதான் பல கோவில்கள் இடிக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பில் கட்டியிருந்தால் நீங்கள் இடிங்க தப்பில்லை, ஆனால் இந்து கோவில்களை மட்டும் இடிப்பது.

நான் என்ன கேட்கிறேன், மசூதிகளில் அந்த கூம்புவடிவ ஒலிபெருக்கி இருக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம்,  உச்ச நீதிமன்றம்  பலமுறை தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அதுவும் நீதிமன்றத்தின் உத்தரவு தானே, என்ன சொல்றாங்க…  நீதிமன்றத்தின் உத்தரவு அதனால கோவிலை இடித்தோம் என்று சொல்றாங்க, நான் என்ன சொல்றேன் யாரு அந்த கோவில்களை நீர் வழித்தடங்களில் கட்டி இருந்தால் தவறு தான், நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அது என்ன இந்துக்களுக்கு ஒரு நியாயம், இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் ஒரு நியாயம். எந்த மசூதி,  எந்த சர்ச்யும் அப்படி கட்டப்படவில்லையா, எழுதிக் கொடுங்கள் என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |