Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்து ஓட்டு சிதறாம வேணுமா ? உடனே இதை செய்யுங்கள்… அதிமுகவுக்கு பிரபல கட்சி வேண்டுகோள் ..!!

ஹிந்து ஓட்டுக்கள் சிதறாமல் திமுகவை வீழ்த்த எங்களுக்கும் கூட்டணியில் இடம் கொடுங்கள் என அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் வைத்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், விரைவில் இந்து மக்கள் கட்சியின் சார்பிலே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இதற்கு மத்தியிலே இந்து மக்கள் கட்சியின் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் முழுமையாக எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது . சேலத்தில் நடைபெற்ற செயற்குழு – பொதுக்குழுவிலே நாங்கள் இந்து ஓட்டுக்கள் சிதறா வண்ணம் ஒன்றுபட்டு, திமுகவை வீழ்த்துகின்ற வகையிலே ஹிந்து சக்திகள்…. ஹிந்துக்களுடைய கோரிக்கைகளை முன்னேறித்தி செயல்படுவதற்காக பாரதிய ஜனதா கட்சி –  அதிமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

இன்னைக்கு தமிழ்நாட்டில் முஸ்லிம் ஓட்டு வங்கிக்காக…. கிறிஸ்தவ ஓட்டு வங்கிக்காக…. எல்லா அரசியல் கட்சிகளுமே இஸ்லாமிய , கிறிஸ்துவ மத அடிப்படைவாத அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி… அவர்களுக்கான குரல் சட்டமன்றத்திலே ஒலிப்பதற்கு  வழிவகை செய்கிறார்கள். இந்துக்களுக்கு ஒரு பாதிப்பு, ஆபத்துன்னா…. இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச, குரல் கொடுக்க சட்டமன்றத்திலே நிச்சயமாக ஆட்கள் தேவை. நாங்கள் பல உயிர்களை இழந்திருக்கின்றோம். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இருக்கிறோம்.

திண்டுக்கல்லில் மலைக்கோட்டையிலே அபிராமியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். ஆலய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பசுவதை தடைச் சட்டம் வேண்டும். எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் வரவேண்டும். தமிழகத்திலே மோடியினுடைய நல்ல திட்டங்கள் இங்கே வரவேண்டும். எனவே தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் ஹிந்துக்களுக்கான பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. ஹிந்து தமிழர்களுக்கான பிரச்சனை… அந்த அரசியல் அங்கீகாரத்தை பிரதிநிதிதுவத்தை இந்து மக்கள் கட்சிக்கு வழங்க வேண்டும்.

எல்லா கட்சியும் ஜாதி, மதம் அரசியல் நடத்திக்கிட்டு இருக்காங்க. ஆன்மீக அரசியல் என்பது சாதி – மதத்திற்கு அப்பாற்பட்டது. இந்துத்துவம் என்பது ஜாதி – மதத்திற்கு அப்பாற்பட்டது. எனவே நாங்கள் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்திக்க விரும்புகிறோம். வெளிப்படையாகவே நான் அவர்களிடத்திலே கோரிக்கை வைக்கின்றேன்.  எனக்கும் உரிமை இருக்கு, அவங்களுக்கும் கடமை இருக்கு.ஆகவே நாங்கள் இந்த விஷயத்திலே தெளிவாக இருக்கிறோம். அவர்களும் இந்துக்களை புறக்கணித்தாலும் நிச்சயமாக நாங்கள் 234 தொகுதியிலும் போட்டியிடும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Categories

Tech |