ஹிப் ஹாப் ஆதியின் சிங்கிள் பசங்க பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி மீசையமுறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் நட்பே துணை படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பசங்க பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது .
Single Pasanga track from Natpe Thunai clocks over 100 mil views. Super hit track 👌
100 M + views and 1 M + likes #100MViewsforSinglePasangahttps://t.co/lAhWh5XFCJ
— Haricharan Pudipeddi (@pudiharicharan) May 27, 2021
இந்நிலையில் சிங்கிள் பசங்க பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக ஹிப்ஹாப் ஆதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தற்போது நடிகர் ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.