ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் அசத்தி வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு, நட்பேதுணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சிவகுமாரின் சபதம் படத்தை ஹிப்ஹாப் ஆதியே இயக்கி நடித்துள்ளார்.
இந்த படத்தில் மாதுரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகுமாரின் சபதம் படத்தை வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .